welcome

அஸ்ஸலாமுஅலைக்கும்!எங்களின் புதூர் முரசுக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றோம்!

Wednesday, December 15, 2010

0 சமுதாயத்தை காட்டிக் கொடுக்கும் சண்டாளனின் பேச்சை பாரீர்!

சமுதாயத்தை காட்டிக் கொடுக்கும் சண்டாளனின் பேச்சை பாரீர்!  
Read More...

Monday, November 29, 2010

0 நமதூர் இங்கிலீஷ் தாவூத் எழுதி சமரசம் இதழில் வெளிவந்த கட்டுரை.

Read More...

Saturday, November 27, 2010

0 பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.




ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport. gov.in/pms/ Information. jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா
என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும்
From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்


அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECRமுத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.



அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது
மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.
.


Read More...

Thursday, November 18, 2010

0 நித்தமும் நாடகம்! நினைவெல்லாம் 'காவி'யம்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
சகோதரர் பாக்கர் அவர்களால் துவங்கப்பட்டு, அவரது தலைமையின் கீழ் இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் குழப்பம் விளைவிக்கும் நோக்கில், அதே பெயரில் தனது வாரிசை தலைவராக்கி, ஒரு மைத்துனரை பொதுச்செயலாளராக, மற்றொரு மைத்துனரை பொருளாளராக, தனது மற்ற இரு இளவல்களை உறுப்பினர்களாக ,சகலையை, சகலையின் மகனை இப்படி ஒட்டுமொத்த குடும்பத்தை மட்டும் காட்டி பதிவு செய்த பீஜே,

அபகரிக்கப்பட்ட பெயரின் அதிகாரப் பூர்வ இணையதளம் என்ற பெயரில் நடத்திவரும் தளத்தில், தனது சங்கத்தின் தலைமையக முகவரி ஆரம்பத்தில் 30 அரண்மனைக்காரன் தெருவென்றும், பின்பு அடுத்த பத்து நிமிடத்தில் அங்கப்பநாயக்கன் தெருவென்றும் நாடகமாடினார்.

தனது நாடகத்தின் அடுத்த கட்டமாக, யாரை நிர்வாகிகளாக காட்டி பதிவு செய்தாரோ, அந்த குடும்ப உறுப்பினர்களை, அதாவது தலைவரான முஹம்மதை, பொதுச் செயலாளரான ஹிதாயத்துல்லாவை, பொருளாளரான ஷம்சுல் ஹுதாவை நிர்வாகிகளாக வெப்சைட்டில் அடையாளம் காட்ட திராணியின்றி, முதலில் மூன்று பேரை மாநிலச்செயலாளர்கள் என்று அடையாளம் காட்டினார். ரெண்டு நாளில் அந்த மூவரில் ஒருவரையே பொதுச்செயலாளராக அடையாளம் காட்டுகிறார்.

முதலில் அடையாளம் காட்டப்பட்ட மூவரில் ஒருவரான ஷபீக் என்பவரை காணாமல் ஆக்கிவிட்டு, இப்போது மவ்லவி ஜமால் என்பவரை மாநிலச்செயலாளர் என்று அடையாளம் காட்டுகிறார். கானல் நீரை விட வேகமாக இவர்களது வெப்சைட்டில் இருக்கும் நிர்வாகிகள் மறைவதும், புதிய நிர்வாகிகள் தோன்றுவதுமாக உள்ளனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரை களவாட, பயன்படுத்திய தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாக காட்ட பீஜே தயங்குவது ஏன்? உண்மையான பொறுப்பாளர்களான குடும்ப உறுப்பினர்களை மறைத்து யாரையோ பொதுச்செயலாளராக, நிர்வாகிகளாக அடையாளம் காட்டுவது ஏன் தெரியுமா?

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை கைப்பற்றியது கொள்கைக்காக என்று மக்களை ஏமாற்றியாகிவிட்டது. இந்த நேரத்தில் உண்மையான நிர்வாகிகளான தனது மகனையும், மைத்துனர்களையும் நிர்வாகிகளாக அடையாளம் காட்டினால்,
''ஏனப்பா! கொள்கைக்காக[!] கைப்பற்றிய இயக்கத்தை குடும்ப சொத்தாக பதிவு செய்துள்ளாயே என்று கேட்பார்கள். அதோடு, உனது மகன்களும்- மைத்துனர்களும் தவ்ஹீதுக்காக, தவ்ஹீத் ஜமாத்திற்காக செய்த தியாகங்கள் என்ன என்று கேட்டு காரி துப்புவார்கள். அதனால்தான் பதிவு செய்ய பயன்படுத்திய குடும்ப உறுப்பினர்களை மறைத்து, யார் யாரையோ நிர்வாகிகளாக காட்டியும், மறைத்தும், மாற்றியும் மக்களை ஏமாற்றுகிறார் பீஜே.

மேலும், நேச்சுரல் ஜாபர் என்பவர் பெயரில் ஒரு அறிக்கையும் அந்த வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. அதில் தற்போது சீனில் உள்ள மும்மூர்த்திகளின் தியாக வரலாறு பட்டியலிடப் பட்டிருந்தது. சிறுநீர் கழித்து விட்டு திரும்பி வந்து பார்த்தால், ஐந்து நிமிடத்தில் இன்றைய நிர்வாகியான ஜமால் என்பவரின் தியாக வரலாறும் சேர்ந்துவிட்டது. இவர்களின் தியாக வரலாறு குறித்து நாம் அலசவேண்டிய அவசியமில்லை.

பீஜே, பாக்கரின் அமைப்பு பெயரை பதிவு செய்யும்போது நிர்வாகிகளாக அடையாளம் காட்டினாரே! அந்த தனது இளவல்கள்- மைத்துனர்கள். இவர்கள் தவ்ஹீதிற்காக, தவ்ஹீத் ஜமாஅத்திற்காக, தமிழகத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை பட்டியலிடத் தயாரா? கள்ளத்தனமாக பதிவு செய்யும்போது பயன்படுத்திய தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாக அறிவிக்கும் திராணி பீஜெயிக்கு உண்டா?

கெட்டிக்காரனின் பொய்யும்- புரட்டும் எட்டுநாளைக்கு என்பார்கள். இப்போது இந்த பொய்யரின் முகத்திரை ஐந்து நாளிலேயே கிழிந்து தொங்குகிறது. இன்னும் இழிவு காத்திருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

--
11/18/2010 07:13:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
__._,_.___
Read More...

0 பல்லாவரத்தில் ஜண்டா அகற்றம்! மதரசா துவக்கம்!





இஸ்லாத்தில் இருந்து கொண்டு அதன் மூலாதாரக் கொள்கையான தவ்ஹீதை மறந்து தர்காக்களுக்கும் , ஜன்டாக்களுக்கும் [கொடி மரம்] சென்று , அதன் அருகில் நின்று கொண்டு கை ஏந்தி பிரார்த்திக்கும் ஏதுமறியா மக்களிடம் எடுத்து சொல்லி , அவர்களுக்கு இணை வைப்பின் தீமையை எடுத்து சொல்லி ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பு விடுத்து வருகிறோம்! அப்படி ஒரு கொடி மரத்தை வைத்து மந்திர வேலை செய்து, மக்களிடம் பணம் பெற்று அதை பிழைப்பாக நடத்தி வந்த ஒருவருக்கு சில வருடத்திற்கு முன் தாவா செய்ததன் அடிப்படையில் ,அவர் அந்த கொடி மரத்தை இடித்து தகர்த்து விட்டு அந்த இடம் இன்று ஏகத்துவத்தை பறைசாற்றும் பள்ளிவாசலாக ஐவேளை தொழுகை நடை பெற்று வருகிறது!

சேப்பாகத்தின் லாக் நகரில் உள்ள அந்த சகோதரர் யூசுப் தற்போது இ.த.ஜ.வின் சேப்பாக்கம் கிளை செயலாளராக பணியாற்றி வருகிறார்.தான் நரக நெருப்பின் கரையில் வெளியேறி விட்டாலும் ,பல்லாவரத்தில் இருக்கும் என் சகோதரிகள் இந்த ஜண்டா எனும் இணை வைப்பில் இன்னும் இருந்து வருகின்றனர்.அவர்களுக்கும் நீங்கள் எடுத்து சொல்லி அதில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்! என அழைப்பு விடுக்க காஞ்சி மாவட்ட, மற்றும் பல்லாவர கிளை நிர்வாகிகள், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில செயலர் ஜாகிர் ஆகியோரோடு நாம் அங்கு சென்று அவர்களுக்கு எடுத்து சொல்லி , மத பேதமின்றி [!?] அப்பகுதி மக்களால் ஊது பத்தி ஏற்றி வணங்க பட்டு வந்த அந்த கொடி மரத்தை சிறிது நேரத்தில் அகற்றிய நம் சகோதரர்கள் மற்றொரு சகோதரியின் வீட்டில் பச்சை நிற துணியில் தொங்கிக் கொண்டிருந்த தேங்காயையும் அகற்றினர் .

அகற்றி விட்டு 'இதனால் ஏதும் ஏற்பட்டு விடும்' என அறியாத மக்கள் உங்களிடம் வந்து குழப்புவார்கள்! நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள் அல்லாஹ் விதித்ததை தவிர வேறொன்றும் அணுகாது' என்று கூறுங்கள் என சொன்ன போது இந்த பகுதி மக்கள் எல்லாம் இணை வைப்பில் மூழ்கி கிடக்கின்றனர் அவர்களை மீட்டெடுக்க இங்கு வாராந்திர பெண்கள் பயானுக்கு ஏற்பாடு செய்யுங்கள் அதற்க்கு எனது மாடியை பயன்படுதிக் கொல்லுங்கள்! என்றார் சத்தியம் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் அது தன் வேலையை உடனடியாக செய்ததை நம் கன்னல் கண்ட போது உண்மையிலேயே உள்ளம் மகிழ்ந்தது!
Read More...

Tuesday, October 26, 2010

0 இந்தியா டுடே பேட்டியும் அண்ணனின் பல்டியும்!



சமிபத்தில் வெளியான இந்தியா டுடே பேட்டியில் பி.ஜே.வின் முரண்பாடுகள்: .

பல்டி ஒன்று - திருவிடசெரி கொலை விசயத்தில் சம்மந்தப்பட்ட குத்புதீன் ' எந்த விதத்திலும் ஜமாத்தோடு தொடர்புடையவர் இல்லை' என்ற நிலை மாறி'அமைப்பின் அனுதாபி' என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளார்.

பல்டி இரண்டு; அரசியல்வாதிகள் சந்திப்பு தேவை இல்லை! உத்தரவு போட்டால் உயிரை கொடுத்து [!?] ஒட்டுகேட்போம்!என்று புதுபேட்டையில் பேசிய பி.ஜே. இன்று மார்கத்தை முன்னிறுத்தும் நீங்கள் அரசியல் தலைவர்களை சந்திக்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு 'அவர்களிடத்தில் தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பல்டி மூன்று : பாபர் மஸ்ஜித் தீர்ப்பை முஸ்லிம்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்ற கேள்விக்கு 'தங்கள் எதிர்ப்பை காட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்'! என்று தன் முந்தைய நிலைப்பாட்டை முஸ்லிம்களின் நிலைப்பாடாக கூறி பிந்தைய தன் போராட்ட நிலைப்பாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளார் [இது செயற்குழுவுக்கு முந்திய பேட்டி என்றாலும் பல்டி பல்டிதான்]

பல்டி நான்கு: இது வரை அல்லாஹ்வை நம்பிய அண்ணன் 'மதரசாக்களில் ஆங்கிலமும் அறிவியலும் புறக்கணிக்கப்பட்டது துரதிஷ்டம் ஆன முடிவு' ' என்று சொல்லி ' அதிஷ்டத்தை' நம்பத் துவங்கியுள்ளார்.
Read More...

Saturday, October 23, 2010

0 நரகத்திலிருந்து மீட்பது அல்லாஹ்வா? அண்ணனா?

''நாளை நமக்கும் இக்கதிதான் ஏற்படும் என்பதை உணராத சிலர், தனிநபருக்காக ஒரு ஜமாஅத் போராட்டத்தில் ஈடுபடுவதா? என கூக்குரலிடுகின்றனர். நரகத்தின் விளிம்பிலிருந்த தமிழக முஸ்லிம்களை பாதுகாக்க போராடியதில், இந்த தனிநபருக்கு பெரும்பங்குண்டு.'' என்ற வாதத்தை வைத்து, நக்கீரனுக்கு எதிராக நடத்தப்படட் 'தக்லீது' போராட்டத்தை நியாயப்படுத்துகிறது அண்ணன் ஜமாஅத்.

இந்த வாதம் சரியா? என்று பார்ப்பதற்கு முன்னால், ஒரு வாதத்திற்கு இவர்தான் தமிழக முஸ்லிம்களின் 'நரக மீட்பர்' என்றே வைத்துக் கொண்டாலும், இவரை யாரும் விமர்சிக்கவே கூடாது என்ற சட்டம் எதுவும் உள்ளதா?

நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட முடியும் என்ற சட்டம் இருந்தும், பாபர் மஸ்ஜித் விஷயத்தில் நீதிமன்றத்தின் அநியாயதீர்ப்பை அண்ணன் உட்பட, முஸ்லிம்கள் அனைவரும் எதிர்க்கும்போது, இவரை பற்றி மட்டும் விமர்சித்தால், போராட்டம்-முற்றுகை என்றால் இவர் என்ன குறைகளுக்கு அப்பாற்பட்ட மலக்கா?

அடுத்து அவர்களின் வாதத்திற்கு வருவோம். நரகத்தின் விளிம்பிலிருந்த தமிழக முஸ்லிம்களை மீட்டதில் இவருக்கு பெரும் பங்குண்டாம். தமிழக முஸ்லிம்கள் நரகத்தின் விளிம்பில்தான் நின்றார்கள் என்று இவர் எப்படி அறிந்து கொண்டார்? இவருக்கு என்ன வஹியா வருகிறது?

முஸ்லிம்கள் இணைவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் நரகத்தின் விளிம்பில் நின்றார்கள் என்று கூறினோம் என்று கூற வருவீர்களானால், எல்லா தமிழக முஸ்லிம்களுமா இணைவைத்துக் கொண்டிருந்தார்கள்?

மேலும் ஒரு போராட்டத்தில் தனக்கு பெரும் பங்குண்டு என ஒருவர் எப்போது கூறிக்கொள்ளலாம் என்றால், அந்த போராட்டத்தில் ஓர் முடிவு எட்டப் பட்டிருக்க வேண்டும். ஒன்று வெற்றி அல்லது தோல்வி. அதாவது அண்ணன் உரிமை கொண்டாடும் போராட்டமான 'நரகத்திலிருந்து மீட்பு' என்பதை பொருத்தவரை நரகத்திலிருந்து உறுதியாக தமிழக முஸ்லிம்கள் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழக முஸ்லிம்களில் இத்தனை லட்சம் பேரை, அல்லது இத்தனை ஆயிரம் பேரை, அல்லது இத்தனை நூறு பேரை, அல்லது ஒரு பத்து பேரை, அல்லது ஒரே ஒருவரையாவது நான் நரகத்திலிருந்து மீட்டிவிட்டேன் என்று அண்ணனால் உறுதியாக கூறமுடியுமா? அட அவ்வளவு வேண்டாம். 'நரக மீட்பர்' என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அண்ணன், நான் நரகம் செல்லமாட்டேன் என்று தன்னளவில் உத்திரவாதம் தரமுடியுமா?

சரி. தனது நரகமீட்பில் தோல்வி என்றும் உறுதியாக கூறமுடியுமா? என்றால் அதுவும் முடியாது. எனவே தமிழக முஸ்லிம்களில் எவர் நரகம் செல்வர்- எவர் சொர்க்கம் செல்வர் என இறைவனின் பதிவேட்டில் உள்ளதுதான் நடக்கும். இதில் அண்ணன் பில்டப் செய்வதாக இருந்தால், குறைந்தது தன்னளவில் உத்திரவாதம் தரட்டும்.

இன்னும் சொல்லப்போனால், கேமராவின் வெளிச்சத்திலும், இரவை பகலாக்கும் வெளிச்சத்திலும், அலங்கரிக்கப்பட்ட மேடையில் முழங்கும் இவரைப்போல், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அழைப்பு பணி செய்த அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களோ,தங்களின் உயிர் பொருள் அனைத்தையும் தனது மார்க்கம் வளர்த்த சஹாபாக்களோ, ஒரு ஹதீஸை பெற பலநூறு கிலோ மீட்டர் பயணித்த இமாம்களோ, இறை பொருத்தத்தை மட்டுமே நாடி அழைப்பு பணியாற்றும் இன்றைய நல்ல அறிஞர்கள் எவருமே தங்களை 'நரக மீட்பர்' என்று பெருமையடித்துக் கொள்ளவில்லை. இதிலும் அண்ணன் தனித்து விளங்குகிறார்.

இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - இது அல்லாஹ்வின் கூற்று.

'நரகத்தின் விளிம்பில் இருந்த தமிழக முஸ்லிம்களை மீட்க போராடினேன்- இது அண்ணன் கூற்று.

இதில் எதை பின்பற்றவேண்டும் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டுகிறோம்.

--
10/18/2010 09:42:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
Read More...

Tuesday, October 5, 2010

0 எங்கும் ஆபாசம் - எதிலும் ஆபாசம்

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதி. இன்றைய கவிஞன் பாட்டெழுதினால் எங்கெங்கு காணினும் ஆபாசமடா என்று கூறுமளவுக்கு எங்கும் ஆபாசம் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆபாசத்தை அரங்கேற்றியது பல துறைகளாக இருந்தபோதிலும், தாராளமயமாக்கிய பெருமை சினிமாவுக்குத்தான் சேருகிறது. நாட்டுப் புற பெண்ணின் பாத்திரமாக இருந்தாலும் கனவில் பாடுவதாக காட்டி அரைகுறை ஆடையில் ஆட வைத்து விடுகிறார்கள்.
முந்தைய காலங்களில் திரைப்படத்தின் ஒரே ஒரு பாடலுக்கு வரும் நடிகைகள் தான் ஆடைக் குறைப்பில் ஈடுபடுவார்கள். இப்போதோ கதாநாயகிகளுக்கு கூட உடைப் பஞ்சம் ஏற்பட்டு விடுகிறது.

திரைப்படத்தில் வரும் காட்சிகளை கவனமாகப் பார்த்து, ஆபாசக் காட்சிகளை நீக்க வேண்டிய சென்சார் அதிகாரிகள் சிறிய அளவு கெடுபிடி செய்தாலும் முக்கால்வாசி படமும் வெட்டுப்பட வேண்டிய சூழ்நிலை.

இதனால் தான் ஒரு கவிஞன் பாடினான்...
அந்தக் காலத்து நடிகைகள் நடித்துக் காட்டினார்கள், இந்தக் காலத்து நடிகைகள் காட்டி நடிக்கிறார்கள் என்றான்.

பெரிய திரையின் கதை இதுவென்றால், சின்னத் திரையோ உருவத்தில் சிறுத்தாலும் ஆபாசப் போட்டியில் பெரிய திரையை பின்னுக்கு தள்ளி விடுகிறது.ஆரம்பத்தில் தூர்தர்ஷனாக இருந்த காலகட்டத்தில் பெரிய திரையின் ஆதிக்கம் வெள்ளிக்கிழமையில் ஒளியும் - ஒலியும் நிகழ்ச்சியிலும், ஞாயிற்றுக் கிழமை திரைப்படத்திலும் மட்டுமே இருந்தது. கேபிள் டிவியின் வருகையும், தனியார் சேனல்களின் படையெடுப்பினாலும் முழு நேரமும் திரைப்படங்களின் ஆதிக்கமாகவே மாறிவிட்டது சின்னத்திரை.

வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன தொலைக்காட்சிகள். அறிவுப்பூர்வமாக செய்திகளை மட்டும் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் உட்கார்ந்தாலும், இடையில் விளம்பரம் என்ற போர்வையில் அரைகுறை ஆடைகளை அணிந்த பெண்களை கண்ணில் காட்டத் தவறுவதில்லை.
சேலை விளம்பரத்திலும், பெண்களின் ஆடைகள் குறித்த விளம்பரத்திலும் மட்டும் கவர்ச்சி ஆடை பெண்கள் வந்த நிலை போய், மோட்டார் பைக் விளம்பரங்களிலும், ரியல் எஸ்டேட் விளம்பரங்களிலும், ஷேவிங் கிரீம் விளம்பரங்களிலும் கவர்ச்சி உடை பெண்கள் அணிவகுத்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா அறிமுகப்படுத்தியுள்ள குத்தாட்டம் சினிமாவை மட்டு மல்லாமல், பல துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரத்தை நீட்ட ஆரம்பித்துள்ளது.
தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்று கடை பரப்பிய குத்தாட்டம், முதல்வருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களில் எல்லாம் கட்டாயமாக ஆட வேண்டிய தேசிய ஆட்டமாக மாறிவிட்டது.

அரசியல் கட்சி மேடைகளில் பெரிய தலைவர்கள் வரும் வரை கூட்டத்தை கலைய விடாமல் செய்ய நகைச்சுவை, மிமிக்ரி போன்றவை நடந்தது அந்தக் காலத்தில்.
இப்போதோ, பெரிய தலைவர்கள் வரும் வரை கூட்டத்தைக் கலைய விடாமல் வைத்திருப்பது ஆபாச அசைவு காட்டும் குத்தாட்டங்கள்தான். குத்தாட்டத்தின் மகிமை பள்ளி ஆசிரியைகளுக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான் பள்ளி ஆண்டு விழாக்களில் மாணவ - மாணவிகள் குத்தாட்டம் ஆடுவதற்கு பயிற்சியளிக்கிறார்கள்.

இந்த ஆட்டம் இப்படியென்றால், இன்னொரு ஆட்டமான விளையாட்டிலும் ஆபாசம். ஆடைக் குறைப்பு புகுந்துவிட்டது. உடல் ஆரோக்கியத்திற்கும், மன வலிமையை உருவாக்குவதற்கும் விளையாடப்படுவது தான் விளையாட்டு. இதன் நோக்கமும் மாறிவிட்டது.

டென்னிஸ் விளையாட்டு வேகத்திற்கும், விவேகத்திற்கும் எப்படி பெயர் போனதோ, அதேபோல் குட்டைப் பாவாடைக்கும் பிரசித்தி பெற்றது.பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் குட்டைப் பாவாடையுடன் விளையாடுவதாலும், அதனை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய காரணத்தினாலும்தான் அந்த விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம் பேர் உருவானதாக நாட்டில் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆவேசத்துடன் பாய்ந்து மட்டையால் பந்தை அடிக்கும்போது அடிக்கும் காட்சியை காட்டும் தொலைக்காட்சி, பந்தை அடிக்கப் பாய்கிறபோது குட்டைப் பாவாடை பறந்து உள்ளாடை தெரிவதை ஸ்லோமோஷனில் காட்டத் தவறுவதில்லை.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியைவிட பிரபலமான கிரிக்கெட்டிலும் இந்த ஆபாசம் அரங்கேற ஆரம்பித்து விட்டது. ஐபிஎல் போட்டியில் அறிமுகமான அசிங்கம் எல்லாப் போட்டிகளிலும் கடை பரப்பத் துவங்கி விட்டது.

பந்து எல்லைக் கோட்டை தாண்டும்போதும், வீரர்கள் ஆட்டமிழக்கும் போதும் முன் காலங்களில் ரீப்ளே போடுவார்கள். இப்போது அதனுடன் சேர்த்து "சியர் கேர்ள்ஸ்' என்னும் அரைகுறை ஆடைகள் அணிந்த பெண்களின் அசிங்க ஆட்டத்தையும் சேர்த்துக் காட்டுக்கிறார்கள்.

ஆபாசங்களை விளையாட்டில் அள்ளிக் குவிப்பதில் முதலிடம் எதற்கு என்றால் சந்தேகமில்லாமல் பீச் வாலிபாலுக்குத்தான். விளையாட்டு என்ற போர்வையில் டூ பீஸ் உடையில் இவர்கள் குதிக்கும் கன்றாவியைப் பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதாக பெருமை வேறு.

இந்த நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறுவதென்றால் பிரதான இடம் பிடிப்பது செல்போனும், இணைய தளமும் தான். இவைகளையும் இந்த ஆபாச அசிங்கங்கள் விட்டு வைக்கவில்லை.

எந்தத் துறைகளைப் பற்றிய தகவல்களையும், எந்த நாட்டைப் பற்றிய தகவல்களையும் இருந்த இடத்திலேயே பெற உதவுவது இணைய தளத்தின் சிறப்பு. அறிவியலின் அற்புதமாகவும், அறிவுச் சுரங்கமாகவும் விளங்க வேண் டிய இணைய தளத்தையும் ஆபாச ஆக்டோபஸ் விட்டு வைக்கவில்லை ஆபாசங்கள் இணைய தளங்கள் முழுவதும் வியாபித்து பரவியுள்ளன.

காட்சி ஆபாசங்கள் ஒருவகை என்றால், செல்போனில் நிகழ்த்தப் பெறும் ஆபாச உரையாடல்கள் இன்னொரு வகை. இந்த இரண்டு ஆபாசங்களிலும் சிந்தையைப் பறிகொடுத்து, பெரும் தொகையை இழந்தவர்க்ள பலர். ஆபாச நிறுவனங்களுக்கு டெலிபோன் நிறுவனங்கள் மூலம்தான் பணம் செல்கின்றது என்பதுதான் வேதனை. அரசு தொலைபேசி நிறுவனங்கள் மூலமாகவும் ஆபாச நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்படுகின்றது என்பது வேதனையிலும் வேதனை.ஆபாசமும், ஆடைக் குறைப்பும் தான் விபச்சாரத்தின் ஆணி வேர்கள், ஊற்றுக் கண்கள், பிரதான வாயில்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும். (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (அல்குர்ஆன் 7:26)

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 17:32)
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறது திருமறைக்குர்ஆன்.

ஆபாசமும், அசிங்கமும்தான் இன்றைய இளைய தலைமுறையை வழி கேட்டில் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமுதாயத்தில் ஒழுக்கக் கேட்டை வளர்க்கின்றன. தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வெறுமனே சினிமா போஸ்டர்களின் மீது தார் பூசுவதினால் மட்டும் ஆபாசம் ஒழியாது.

ஒரு அநீதியைக் கண்டால் அதனை கையால் தடுக்க வேண்டும், அதற்கு சக்தி பெறாவிட்டால் வாயால் தடுக்க வேண்டும், அதுவும் முடியாவிட்டால் மனதளவில் வெறுத்து ஒதுங்கி விட வேண்டும் என்கிற இஸ்லாமிய போத னையை கடைபிடிப்பதன் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும்.

ஒரு தீமையைத் தடுக்க வேண்டுமென்றால் அது நிகழ்வதற்கான அத்தனை வாசல்களையும் மூட வேண்டும். சமூகத்தின் மிகப் பெரிய தீமையான விபச்ôரத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அதன் பிரதான வாசலான ஆபாச ஆடைக் குறைப்பை உடனடியாக ஒழிக்க வேண்டும். அதுதான் விபச்சார ஒழிப்பிற்கான சம்மட்டி அடி என்பதை உணர வேண்டும்.
=============
Read More...

Tuesday, September 21, 2010

0 அன்புள்ள அண்ணனுக்கு!


அன்புள்ள அண்ணனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்!
தங்களை தவிர மற்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை! தங்கள் மர்கஸ் இல்லாத இடங்களில் மட்டும் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் தொழுவது கூடும்! மற்ற பள்ளிவாசல்களில் தொழுவது கூடாது! மற்ற முஸ்லிம்களை பின் பற்றி தொழுவது கூடாது ! தங்களை தவிர மற்ற கொள்கைவாதிகள் அனைவரும் வழிகேடர்கள்!பள்ளிவாசல்களில் ஜமாஅத்களில் ஏற்படுத்திய குழப்பங்கள்,சண்டைகள்,எஸ்.பி.பட்டினம் பள்ளியை தொழுகை நடை பெறாமல் பூட்ட வைத்த அநியாயம் ,மேலும் பல பள்ளிவாசல் அபகரிப்புகள், என அனைத்தையும் மறந்து இட ஒதுக்கீட்டை பெற கருத்து வேறுபாடுகளை மறந்து முஸ்லிம்களே வாருங்கள்! உங்களை காட்டி நாங்கள் அரசியல் ஆதாயம் பெற மாட்டோம் என நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, நம்பி வந்த மக்களை ,கழுத்தறுக்கும் நயவஞ்சகனை போல் ,அந்த சுன்னத் ஜமாஅத் மக்கள் சுட்டுக் கொல்லப்பட காரணமான நீங்கள் , அதற்காக வருத்தம் கூட தெரிவிக்காமல், அதை மறைத்து ,மறுத்து தற்காப்புக்காக கொல்வதில் தவறில்லை என உங்கள் தொலை கட்சியில் வாதிட்டீர்கள்.ஆனால் உண்மையை உலகிற்கு எடுத்து சொன்ன தமிழகத்தின் முன்னணி ஊடகங்களை உங்களின் அறியாதொண்டர்களை விட்டு மிரட்டியதோடு ,நாங்கள் பல லட்சம் மக்களை கூட்டும் இயக்கம் என இட ஒதுக்கீடிற்காக வந்த மக்களை உங்களின் கூட்டமாக காட்டி ஆதாயம் தேட பார்க்கின்றீர்கள்! அது மட்டுமின்றி மூன்றாம் தர ரவுடிகள் குற்றத்தை செய்து விட்டு அரசியல் வாதிகளின் நெருக்கத்தை காட்டி தப்பிப்பது போல் , பிரதமரே அழைத்து [?] பேசும் இயக்கத்தை பற்றி அவதூறு வெளியிட்டால்
விளைவு என்னாகும் தெரியுமா? என கேவலமாக பிரதமரை இழுக்கின்றீர்களே ! சுன்னத் ஜமாஅதினரை சுட்டு கொல்வதற்க்கா ஜே.எம்.ஹாருன் உங்களை பிரதமரை சந்திக்க வைத்தார். இது போன்ற கேவலமான, மக்களை காட்டி நீங்கள் நடத்தும் மலிவான அரசியலை இனியேனும் நிறுத்தி கொள்ளுங்கள். இல்லையெனில் மறுமையில் அந்த மக்கள் கூட்டத்தின் முன் கேவல படுத்தப்படுவீர்கள். -இப்படிக்கு செங்கிஸ் கான்.
Read More...


நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் சகோதரர் பாக்கர் மற்றும் செங்கிஸ் கான் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை.
Read More...

0 முன் மாதிரி முஸ்லிம் கிராமம்







முதியோர் உதவித் தொகை வழங்கும் முன் மாதிரி ஜமாஅத் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் ரிப்போர்ட்டில் வெளிவந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார் கள். தற்போது அதே இளையான்குடி புதூரில் வட்டி தடை செய்யப்பட்டுள்ளதாக அறிந்து அது பற்றி விசாரித்தோம்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே உள்ள புதூர் சுமார் 800 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட சிறிய ஊர். நகரமும் கிராமமுமற்ற நடுத்தரமான அழகிய ஊரான புதூரைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள பெரும்பாலான மேன்சன்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை. சென்னையில் வாழ்ந்தாலும் சொந்த ஊரின் மேல் அக்கறை கொண்ட இவ்வூர் இளைஞர்கள், புதூர் முஸ்லிம் நற்பணி மன்றம், அழகிய கடன் உதவி அறக்கட்டளை அல்ஹுதா மதரஸô போன்ற அமைப்புகளை நிறுவி, பல்வேறு மார்க்கப்பணி மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்து வருவதோடு பிறந்த ஊரான புதூர் முன்னேற்றத்திலும் அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றனர்.



பைனான்ஸ் மற்றும் சீட்டு எனும் பெயரில் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் புதூரில் உள்ள ஏழை எளியவர்கள் சிக்கி அதனால் பல்வேறு இன்னல்களுக்கும், ஏச்சு பேச்சுகளுக்கும் ஆளாகி வருவதாகவும், இதனால் பல தீமைகளுக்கும் இந்த வட்டி எனும் அரக்கன் வழிவகுப்பதாகவும் அறிந்து, மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் ""புதூர் மக்கள் உதவிக் குழு'' எனும் பெயரில் குழு அமைத்து விசாரித்ததில், பதினைந்துக்கும் மேற்பட்ட பிற மதத்தைச் சேர்ந்த சீட்டுக் கம்பெனிக்காரர்கள் தினமும் ஊருக்குள் சுமார் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளில் வட்டிக்குப் பணம் கொடுத்து லேவாதேவியில் ஈடுபட்டு வசூலுக்கு வருவதாக அறிந்து, அவர்களை அழைத்து விசாரித்ததில் சுமார் எட்டு லட்சம் வரை கடன் கொடுத்திருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு ஊரில் அறிவிப்புச் செய்து கடன் வாங்கிய அனைவரையும் தங்களது கணக்கு நோட்டுக்களை எடுத்து வரச் சொல்லி ஆய்வு செய்ததில் சுமார் 6,50,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது தெரிய வந்தது.
ஃபைனான்ஸ்காரர்களை ஓரிடத்திற்கு வரவழைத்து மக்களை கசக்கிப் பிழியும் வட்டியின் தீமையையும், வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கும் அல்லாஹ்வின் வாக்குறுதிகளையும் எடுத்துச் சொல்லி வட்டியை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்கள் எல்லாம் திவாலாகி வருவதையும், அதனால் ஏற்பட்ட கடும் விளைவுகளையும் சுட்டிக் காட்டினார் குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான்.
அசல் மற்றும் வட்டி போக, அதன் பின் உங்களது பாக்கித் தொகையில் 30% மட்டுமே திரும்பத் தர முடியும். அதையும் வரும் மே மாதம் 15ந் தேதி அன்று வந்து நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை மக்களிடம் வசூல் செய்ய ஊருக்குள் வரக் கூடாது. யாருக்கும் வட்டிக்கும் கொடுக்கக் கூடாது.
அப்படி கொடுப்பதாகவோ, வசூலிப்பதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ஒப்பந்தம் எழுதி இரு தரப்பினரும் கையொப்பமிட்டனர்.
மேலும் வட்டிக்குப் பணம் வாங்கிய மக்களை அழைத்து, அவர்களுக்கு மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான், ""இஸ்லாத்தின் பார்வையில் கடன்'' எனும் தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தி, கடனைப் பற்றியும் அதனால் ஏற்படும் சூழ்நிலைகள், விளைவுகளைப் பற்றியும் குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் எடுத்துரைத்தார்.
""இருப்பினும் அவசரத் தேவைக்கு அவர்கள்தானே உதவுகிறார்கள். ஏழைகளாகிய எங்களுக்கு மாற்று வழி என்ன?'' என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். இதற்குத் தீர்வாக, உடனடியாக ஒரு குழு ஏற்படுத்தி தற்காலிக நிதியாக ரூ. 60,000ஐ ஏற்பாடு செய்து, முப்பது சதவீதத் தொகையை முதலில் செலுத்துவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்து, சென்னை சென்றதும் புதூர் மக்களிடம் எடுத்துச் சொல்லி ஒரு நிரந்தர நிதியமைப்பையும் ஏற்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும் ஊரின் நுழைவாயிலில் வட்டி தடை செய்யப்பட்ட ஊர் என்ற போர்டையும் நிறுவ முடிவு செய்து உடனடியாக நிறுவப்பட்டது.
புதூரைப் பின்பற்றி மற்ற முஸ்லிம் ஜமாஅத்துகளும் அல்லாஹ்வினால் ஹராமாக்கப்பட்ட வட்டியைத் தடை செய்ய முன் வந்து, ஜகாத்தை சரியான முறையில் வசூலித்து கந்து வட்டிக்காரர்களிடமிருந்து கடன்பட்ட மக்களை காக்க வேண்டும். செய்வார்களா?
- மங்கோலிய
Read More...

Monday, September 20, 2010

0 பாபரி மஸ்ஜித் தீர்ப்பு - சட்டம் கண்களைத் திறக்குமா?

ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்

உலக அரங்கில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றி, ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் குழிதோண்டிப் புதைத்த நாள் டிசம்பர் 6, 1992. அதாவது, 400 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச்சின்னம் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹபாத் உயர் நீதிமன்றம் சாவகாசமாக வருகின்ற செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு எழுத இருக்கிறது.

400 ஆண்டு காலமாக, உரிய ஆவணங்களுடன் நிலை பெற்றிருந்த ஒரு சொத்து யாருக்குச் சொந்தம்? என்ற கேள்வியே அபத்தமானது. இதனை உணர்ந்ததால் தானோ என்னமோ, சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்த பாபரி மஸ்ஜிதைத் திட்டமிட்டு தகர்த்து விட்டு, பிரச்சினையை நீதிமன்றம் தீர்க்கும் என வழக்கு தொடுக்க வைத்து விட்டனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, சிவில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டு, ஆச்சரியமான முறையில் சம்பந்தப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலைகொண்டிருந்த நிலத்தின் கீழே கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து அறிக்கை தரக்கோரி தொல்பொருள் ஆய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

உலகில் எந்த ஒரு இடத்திலும் இன்று நிலைகொண்டிருக்கும் ஒரு கட்டடத்தின் கீழே வேறு ஏதாவது கட்டடமோ குடியிருப்போ இருந்ததா என்றொரு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுமானால் எப்போதோ இருந்த ஏதோ ஒரு கட்டடமோ குடியிருப்போ நாகரீகச் சின்னங்களோ இருந்ததற்கான தடயங்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில், அதனை அடிப்படையாகக் கொண்டு, இன்று சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கு அந்த நிலம் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்க முடியுமா? அப்படி வழங்கினால், வெள்ளை மாளிகையிலிருந்து நமது இந்திய நாடாளுமன்ற கட்டடம் வரை பெரும்பாலான இடங்கள் அரசுகளின் கைகளை விட்டுச் செல்ல வேண்டிய அபத்தமான சூழல் உருவாகும். தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் அடிக்கடி நிலத்தடியில் கிடைக்கும் சோழர்காலச் சிலைகளையும் நாணயங்களையும் அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் முடிவு செய்தால் எப்போதோ இறந்துபோன சோழர்குலக் குடிமக்களை தேடிப்பிடிக்க வேண்டிய கேலிக்கூத்து உத்தரவையும் நீதிமன்றம் வெளியிடவேண்டிவரும்.

பாபரி மஸ்ஜித் நிலத்தின் கீழே கோயில் இருந்ததா? என்ற தொல்பொருள் ஆராய்ச்சி குழுவின் ஆய்வு முடிவுகளில், 400 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு ஆலயம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அந்நிலத்தில் மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் சில தடய விவரங்களுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் விஜயபாரதம்(10.09.2010) இதழ் மட்டும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இக்கட்டுரையை வாசிக்கும் எவருக்கும் கோயிலின் மீது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. கார்பன் 12, 14 ஆகிய விஞ்ஞான முறைகளில் ஒரு இடத்தை ஆய்வு செய்து, அதில் முன்னர் வாழ்ந்தவர்களின் தடயத்தைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் அந்நிலத்தின் உடமையாளரைத் தீர்மானிக்க ஆரம்பித்தால் என்ன நிலமை ஏற்படும் என்பதைத் தனியாக விளக்க வேண்டியத் தேவையேதும் இல்லை. அத்துடன், 400 ஆண்டுகளுக்கும் 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய நிலை என்ன என்பதை வெறும் தொல்லியல் ஆய்வு கொண்டு 100 சதம் சரியான முடிவுக்கு வருவதும் சாத்தியமற்ற ஒன்று என்பதை அறிவுடையோர் அனைவரும் புரிந்து கொள்வர்.

தொல்பொருள் ஆய்வின் அடிப்படையில் நில உரிமைக்கான தீர்ப்பு வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா? இதுவும் விவாதத்துக்குரிய ஒரு விஷயமே.



பாப்ரி மஸ்ஜித்:சங்க்பரிவாருக்கு நிலத்தின் மீது உரிமையில்லை-நீதிபதி சச்சார்
டெல்லி,செப்.19:கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார்.

"அது ஒருவேளை நம்பிக்கையின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது ஏமாற்று வித்தையாகவோ இருக்கலாம்.

என்னவாயினும், மஸ்ஜிதின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை கைப்பற்ற அதுவெல்லாம் சட்டரீதியாக இயலாது. மஸ்ஜித் கோயில் சிதிலங்களின் மீதுதான் கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தால் முஸ்லிம்களுக்கு அந்த நிலம் திரும்ப வழங்கப்பட்டு அங்கு மஸ்ஜித் நிர்மாணிப்பது உள்ளிட்ட சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும்.

அல்லது பாப்ரி மஸ்ஜித் இருந்த நிலத்தில் கோயில் இருந்தது என்ற தீர்ப்பு வரலாம். ஆனாலும் கூட வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்ஸின் உரிமைக்கோரல் எடுபடாது.

1992-ஆம் ஆண்டில் வி.ஹெச்.பி-ஆர்.எஸ்.எஸ் அக்கிரமக்காரர்கள் தகர்க்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 வருடங்களாக அங்கு நிலைப் பெற்றிருந்ததாகும். பாப்ரி மஸ்ஜித் நிர்மாணிக்க கோயிலை இடித்திருந்தால்கூட சட்டரீதியாக சங்க்பரிவாருக்கு அந்த நிலத்தின் மீது எவ்வித உரிமையுமில்லை." இவ்வாறு சச்சார் கூறியுள்ளார்.

நன்றி: பாலைவனத்தூது / மாத்யமம்

20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிலத்தை உரிய ஆவணங்களுடன் ஒருவர் சொந்தமாகக் கொண்டு அனுபவித்திருந்தால், அது தற்போதைய உரிமையாளருக்கே சொந்தம் என்பதை நீதிபதி சச்சார் அவர்கள் உரியத் தீர்ப்பு ஆதாரத்துடன் விளக்குவதோடு, பாபரி நிலத்தின் உரிமை எவ்வகையில் பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பாபரி நில வழக்கில் எதிர்தரப்பான வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் உட்பட உள்ள சங்கபரிவாரத்தினருக்கு அதனைச் சொந்தம் கொண்டாட எவ்வித உரிமையும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைப்பதைப் பெட்டிச் செய்தியில் காண்க.

வருகின்ற 24 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்ற பாபரி நிலத் தீர்ப்பு விஷயத்தில், என்ன தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வழக்கின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது என்றும் அரசுகள் மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கியக் குற்றவாளியான பாஜக தலைவர் அத்வானியும், "தீர்ப்பு எப்படி அமைந்தாலும் மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்வது உறுதி" என திருவாய் மலர்ந்துள்ளார். இதைவிட ஒருபடி மேலே, ஆர்.எஸ்.எஸ் தலைவர், "தீர்ப்பு எப்படியானாலும் முஸ்லிம்கள் மனமுவந்து நிலத்தை இந்துக்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும். இல்லையேல் அவர்கள் தேசதுரோகிகள் என்றே எண்ணப்படுவர்" என்று பாபரி நில விஷயத்தைத் தேசதுரோகத்துடன் விஷமத்துடன் தொடர்புபடுத்தி விஷயத்தைக் கக்கியுள்ளார்.

அநியாயமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டட விஷயத்தில் தங்கள் தவறை ஒத்துக்கொண்டு, தவறைத் திருத்த முன்வராததோடு அந்த நிலத்தையே தங்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும்; இல்லையேல் முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாவர் என்று கூறுவது, இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்ந்தால் எங்களின் தயையில் நாங்கள் கூறுவதையும் செய்வதையும் விருப்பமில்லையேனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக இருந்தாலும் முழு மனதுடன் ஏற்று, அங்கீகரித்தே வாழ வேண்டும், இல்லையேல் தேசத்துரோகிகள் என்ற முத்திரையுடன் முழுமையாக அழித்தொழிக்கத் தயங்கமாட்டோம் என்றே ஆர்.எஸ்.எஸ் தலைவர் அகங்காரத்துடன் இந்திய முஸ்லிம்களை மிரட்டுவதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

இந்நிலையில், இதுநாள் வரை இந்திய ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கும் என்றும் நம்பிக்கையுடன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு, வர இருக்கின்ற தீர்ப்பு மட்டுமே உரிய நியாயத்தை வழங்கும். இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் ஃபாஸிஸம் தன் வேரைப் பாய்ச்சி வளர்ந்து விட்டச் சூழலில், நீதித்துறையும் தன்னுடைய கண்களைக் கட்டிக்கொண்டால், அது உலக அரங்கில் இந்தியாவை ஒருபோதும் தலைநிமிர வைக்காமல் செய்து விடும்.

நீதி நின்று கொல்லும்?
சத்திய மார்க்கம் .காம்
Read More...
Read More...
Read More...

0 மரணச் செய்தி!

கோஸ் மகளும், சேவர் முஹம்மத் மீரா
மனைவியுமான நைனம்மா இன்று
புதூரில் வபாத் ஆனார்.இன்னா லில்லாஹி
வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.
Read More...

Thursday, September 16, 2010

பெருநாள் தொழுகை -திருச்சியில் திடலில்


அஸ்ஸலாமு அலைக்கும்!


கடந்த 10 -09 -2010 அன்று இந்திய தௌஹீது ஜமாத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகை
நபி வழியில் திடலில்
நடைபெற்றது .இதில் திருச்சியில்முதல் முறையாக
உழவர் சந்தை திடலில் மாநில செயலாளர் சகோ :செங்கிஸ் கான் தலைமையில் நடைபெற்றது.
இந்த பெருநாள் தொழுகையில் திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டது சமுதாய ஒற்றுமையை உலகிற்கு எடுத்து காட்டியது.
இந்த பெருநாளின் உரையில் ரமலானின் வரலாற்று வெற்றிகளையும் ,அதனை தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 26 -12 -2010 இல் இன்ஷா அல்லாஹ்
திருச்சியில் நடை பெறவிருக்கும் வக்பு நிலமீட்பு போராட்ட மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ளும் படி அழைப்பு விடுத்தார்.

அபூ நபீலா




Read More...


பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி
கோடி கோடியாய் சேர்த்து அரசாங்கங்களுக்கே
அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக உருவெடுத்து
அரசியல் வர்க்கம், அதிகாரவர்க்கம் என
தன கையில் வைத்து கொண்டு அப்பாவி பக்தர்களிடம்
ஆபாச விளையாட்டுகள் நடத்தும் அயோக்யனின்
உண்மை முகத்தை உலகிற்கு உணர்த்திய
பி.பி.சி.ஆவனாப்படம். பார்க்க கிளிக் செய்யவும்.
Read More...

Saturday, September 4, 2010

0 இதஜ இஃப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் காதர் முஹைதீன்!

இதஜ இஃப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் காதர் முஹைதீன்!

இறையருளால் நம் தலைமையகத்தில் “இஃப்தார்” எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றும் மேற்ப்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் சமுதாய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அவ்வரிசையில் தேசியலீக் கட்சியின் தலைவர் பஷீர் அஹ்மது அவர்கள், சமுதாய பிரமுகர் அப்போலா ஹீனிஃபா அவர்கள் கலந்து கொண்டர்கள்.

அவ்வாறே சென்ற 27.08.2010 அன்று தமுமுகவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.

அவரைத் தொடர்ந்து முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்கள் நம் அழைப்பை ஏற்று தலைமையத்திற்கு வருகை தந்தார். அவர்களை நம் மாநிலத் தலைவர் பாக்கர், துணைத் தலைவர் முனீர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட காதர் முஹைதீன் அவர்கள் தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார்

Read More...