welcome

அஸ்ஸலாமுஅலைக்கும்!எங்களின் புதூர் முரசுக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றோம்!

Monday, November 29, 2010

0 நமதூர் இங்கிலீஷ் தாவூத் எழுதி சமரசம் இதழில் வெளிவந்த கட்டுரை.

Read More...

Saturday, November 27, 2010

0 பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.




ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport. gov.in/pms/ Information. jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா
என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும்
From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்


அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECRமுத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.



அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது
மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.
.


Read More...

Thursday, November 18, 2010

0 நித்தமும் நாடகம்! நினைவெல்லாம் 'காவி'யம்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
சகோதரர் பாக்கர் அவர்களால் துவங்கப்பட்டு, அவரது தலைமையின் கீழ் இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் குழப்பம் விளைவிக்கும் நோக்கில், அதே பெயரில் தனது வாரிசை தலைவராக்கி, ஒரு மைத்துனரை பொதுச்செயலாளராக, மற்றொரு மைத்துனரை பொருளாளராக, தனது மற்ற இரு இளவல்களை உறுப்பினர்களாக ,சகலையை, சகலையின் மகனை இப்படி ஒட்டுமொத்த குடும்பத்தை மட்டும் காட்டி பதிவு செய்த பீஜே,

அபகரிக்கப்பட்ட பெயரின் அதிகாரப் பூர்வ இணையதளம் என்ற பெயரில் நடத்திவரும் தளத்தில், தனது சங்கத்தின் தலைமையக முகவரி ஆரம்பத்தில் 30 அரண்மனைக்காரன் தெருவென்றும், பின்பு அடுத்த பத்து நிமிடத்தில் அங்கப்பநாயக்கன் தெருவென்றும் நாடகமாடினார்.

தனது நாடகத்தின் அடுத்த கட்டமாக, யாரை நிர்வாகிகளாக காட்டி பதிவு செய்தாரோ, அந்த குடும்ப உறுப்பினர்களை, அதாவது தலைவரான முஹம்மதை, பொதுச் செயலாளரான ஹிதாயத்துல்லாவை, பொருளாளரான ஷம்சுல் ஹுதாவை நிர்வாகிகளாக வெப்சைட்டில் அடையாளம் காட்ட திராணியின்றி, முதலில் மூன்று பேரை மாநிலச்செயலாளர்கள் என்று அடையாளம் காட்டினார். ரெண்டு நாளில் அந்த மூவரில் ஒருவரையே பொதுச்செயலாளராக அடையாளம் காட்டுகிறார்.

முதலில் அடையாளம் காட்டப்பட்ட மூவரில் ஒருவரான ஷபீக் என்பவரை காணாமல் ஆக்கிவிட்டு, இப்போது மவ்லவி ஜமால் என்பவரை மாநிலச்செயலாளர் என்று அடையாளம் காட்டுகிறார். கானல் நீரை விட வேகமாக இவர்களது வெப்சைட்டில் இருக்கும் நிர்வாகிகள் மறைவதும், புதிய நிர்வாகிகள் தோன்றுவதுமாக உள்ளனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரை களவாட, பயன்படுத்திய தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாக காட்ட பீஜே தயங்குவது ஏன்? உண்மையான பொறுப்பாளர்களான குடும்ப உறுப்பினர்களை மறைத்து யாரையோ பொதுச்செயலாளராக, நிர்வாகிகளாக அடையாளம் காட்டுவது ஏன் தெரியுமா?

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை கைப்பற்றியது கொள்கைக்காக என்று மக்களை ஏமாற்றியாகிவிட்டது. இந்த நேரத்தில் உண்மையான நிர்வாகிகளான தனது மகனையும், மைத்துனர்களையும் நிர்வாகிகளாக அடையாளம் காட்டினால்,
''ஏனப்பா! கொள்கைக்காக[!] கைப்பற்றிய இயக்கத்தை குடும்ப சொத்தாக பதிவு செய்துள்ளாயே என்று கேட்பார்கள். அதோடு, உனது மகன்களும்- மைத்துனர்களும் தவ்ஹீதுக்காக, தவ்ஹீத் ஜமாத்திற்காக செய்த தியாகங்கள் என்ன என்று கேட்டு காரி துப்புவார்கள். அதனால்தான் பதிவு செய்ய பயன்படுத்திய குடும்ப உறுப்பினர்களை மறைத்து, யார் யாரையோ நிர்வாகிகளாக காட்டியும், மறைத்தும், மாற்றியும் மக்களை ஏமாற்றுகிறார் பீஜே.

மேலும், நேச்சுரல் ஜாபர் என்பவர் பெயரில் ஒரு அறிக்கையும் அந்த வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. அதில் தற்போது சீனில் உள்ள மும்மூர்த்திகளின் தியாக வரலாறு பட்டியலிடப் பட்டிருந்தது. சிறுநீர் கழித்து விட்டு திரும்பி வந்து பார்த்தால், ஐந்து நிமிடத்தில் இன்றைய நிர்வாகியான ஜமால் என்பவரின் தியாக வரலாறும் சேர்ந்துவிட்டது. இவர்களின் தியாக வரலாறு குறித்து நாம் அலசவேண்டிய அவசியமில்லை.

பீஜே, பாக்கரின் அமைப்பு பெயரை பதிவு செய்யும்போது நிர்வாகிகளாக அடையாளம் காட்டினாரே! அந்த தனது இளவல்கள்- மைத்துனர்கள். இவர்கள் தவ்ஹீதிற்காக, தவ்ஹீத் ஜமாஅத்திற்காக, தமிழகத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை பட்டியலிடத் தயாரா? கள்ளத்தனமாக பதிவு செய்யும்போது பயன்படுத்திய தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாக அறிவிக்கும் திராணி பீஜெயிக்கு உண்டா?

கெட்டிக்காரனின் பொய்யும்- புரட்டும் எட்டுநாளைக்கு என்பார்கள். இப்போது இந்த பொய்யரின் முகத்திரை ஐந்து நாளிலேயே கிழிந்து தொங்குகிறது. இன்னும் இழிவு காத்திருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

--
11/18/2010 07:13:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
__._,_.___
Read More...

0 பல்லாவரத்தில் ஜண்டா அகற்றம்! மதரசா துவக்கம்!





இஸ்லாத்தில் இருந்து கொண்டு அதன் மூலாதாரக் கொள்கையான தவ்ஹீதை மறந்து தர்காக்களுக்கும் , ஜன்டாக்களுக்கும் [கொடி மரம்] சென்று , அதன் அருகில் நின்று கொண்டு கை ஏந்தி பிரார்த்திக்கும் ஏதுமறியா மக்களிடம் எடுத்து சொல்லி , அவர்களுக்கு இணை வைப்பின் தீமையை எடுத்து சொல்லி ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பு விடுத்து வருகிறோம்! அப்படி ஒரு கொடி மரத்தை வைத்து மந்திர வேலை செய்து, மக்களிடம் பணம் பெற்று அதை பிழைப்பாக நடத்தி வந்த ஒருவருக்கு சில வருடத்திற்கு முன் தாவா செய்ததன் அடிப்படையில் ,அவர் அந்த கொடி மரத்தை இடித்து தகர்த்து விட்டு அந்த இடம் இன்று ஏகத்துவத்தை பறைசாற்றும் பள்ளிவாசலாக ஐவேளை தொழுகை நடை பெற்று வருகிறது!

சேப்பாகத்தின் லாக் நகரில் உள்ள அந்த சகோதரர் யூசுப் தற்போது இ.த.ஜ.வின் சேப்பாக்கம் கிளை செயலாளராக பணியாற்றி வருகிறார்.தான் நரக நெருப்பின் கரையில் வெளியேறி விட்டாலும் ,பல்லாவரத்தில் இருக்கும் என் சகோதரிகள் இந்த ஜண்டா எனும் இணை வைப்பில் இன்னும் இருந்து வருகின்றனர்.அவர்களுக்கும் நீங்கள் எடுத்து சொல்லி அதில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்! என அழைப்பு விடுக்க காஞ்சி மாவட்ட, மற்றும் பல்லாவர கிளை நிர்வாகிகள், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில செயலர் ஜாகிர் ஆகியோரோடு நாம் அங்கு சென்று அவர்களுக்கு எடுத்து சொல்லி , மத பேதமின்றி [!?] அப்பகுதி மக்களால் ஊது பத்தி ஏற்றி வணங்க பட்டு வந்த அந்த கொடி மரத்தை சிறிது நேரத்தில் அகற்றிய நம் சகோதரர்கள் மற்றொரு சகோதரியின் வீட்டில் பச்சை நிற துணியில் தொங்கிக் கொண்டிருந்த தேங்காயையும் அகற்றினர் .

அகற்றி விட்டு 'இதனால் ஏதும் ஏற்பட்டு விடும்' என அறியாத மக்கள் உங்களிடம் வந்து குழப்புவார்கள்! நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள் அல்லாஹ் விதித்ததை தவிர வேறொன்றும் அணுகாது' என்று கூறுங்கள் என சொன்ன போது இந்த பகுதி மக்கள் எல்லாம் இணை வைப்பில் மூழ்கி கிடக்கின்றனர் அவர்களை மீட்டெடுக்க இங்கு வாராந்திர பெண்கள் பயானுக்கு ஏற்பாடு செய்யுங்கள் அதற்க்கு எனது மாடியை பயன்படுதிக் கொல்லுங்கள்! என்றார் சத்தியம் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் அது தன் வேலையை உடனடியாக செய்ததை நம் கன்னல் கண்ட போது உண்மையிலேயே உள்ளம் மகிழ்ந்தது!
Read More...